ஷெரீனின் பொறாமை!

i3 1 4
i3 1 4

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தமிழில் ஒரு ரவுண்ட் வந்த ஷெரின், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். ஆனால் நடிப்பில் இருந்து விலகிவிட்ட அவர், தற்போது இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த ஷெரின், இப்போதெல்லாம் சமூகவலைதளங்களில் ஏதாவது தம்பதியினர் புகைப்படங்களை பார்த்தால் தனக்கு பொறாமையாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘காலாகாலத்தில் கல்யாணம் செய்திருந்தால் இப்டியெல்லாம் தோன்றி இருக்காது’ என நக்கலடித்துள்ளனர். ‘இப்போதும்கூட ஒன்றும் கெட்டு போகவில்லை சீக்கிரம் நல்ல பையனா பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்க ஷெரின்’ என சிலர் அக்கறையாக அட்வைஸும் செய்துள்ளனர்.