எப்போது வெளியாகும் ‘மாஸ்டர்’

i3 13
i3 13

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி வெளியாக வேண்டிய படம் கொரானோ ஊரடங்கு காரணமாக எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே, ‘மாஸ்டர்’ டிரைலர் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார்.

“மாஸ்டர்’ டிரைலரை நான் இதுவரை 6 முறை பார்த்துவிட்டேன், டிரைலர் மரண மாஸ் ஆக இருக்கிறது,” என அவர் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதும் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வரும் எனக் கூறியுள்ளார்.