சற்று முன்
Home / சினிக்குரல் / 250வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்
i3 2 5
i3 2 5

250வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்

மலையாள திரையுலகின் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு இணையாக சில வருடங்கள் முன்பு வரை பவனி வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. அதன்பிறகு ஓரிரு படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுஉண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் இருக்கிற படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் இயக்க உள்ளாராம்.. இவர் பிரபல இயக்குனர் அமல் நீரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எந்த ஒரு ஹீரோவுக்கும் 250வது படம் என்பது ஒரு மைல்கல் என்றாலும் மேத்யூ தாமஸ் சொன்ன கதை ரொம்ப பிடித்து போனதால் சுரேஷ் கோபியும் இந்த அறிமுக இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். 90களில் பார்த்த அதே துடிப்பும் விரைப்பும் கொண்ட ஒரு அதிரடியான சுரேஷ்கோபியை மீண்டும் இந்த படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...