நடிப்புக்கு முழுக்கு, சார்மி அறிவிப்பு

i3 4 4
i3 4 4

சார்மி, என்றால் யார் என்பது இன்றைய சினிமா ரசிகர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தின் அறிமுகக் கதாநாயகிதான் சார்மி.

அதன்பின் ‘காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்தார். கடந்த 17 வருடங்களாக அதிகமான தெலுங்குப் படங்களிலும் ஒரு சில மலையாள, கன்னட, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

சார்மி கதாநாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘ஜோதி லட்சுமி’. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தப் படம் வந்த போதே நடிப்பை விட்டு விலக முடிவு செய்திருந்தாராம். ஆனால், தற்போது நடிப்பை விட்டு முழுமையாக விலகுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் சார்மி.

சிம்புவின் அறிமுகக் கதாநாயகி அதற்குள் நடிப்பிலிருந்து விலகுவது ஆச்சரியம்தான். சார்மி அறிமுகமான காலத்தில் அறிமுகமான த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் இன்னமும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சார்மி நேற்று(மே 17) தனது பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடினார்.