சற்று முன்
Home / சினிக்குரல் / குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா?

குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா?

‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் வெளிவந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் கூடவே வந்துள்ளது ஆச்சரியம்தான். அதற்குள்ளாக பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறும்படத்திற்கான கதையமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும் சில விஷயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன. அதில் ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. அவருடைய இசையும், ஒரு ஹம்மிங்கும் ரஹ்மானின் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய இயக்குனர்களிடன் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் ரஹ்மான் இந்த குறும்படத்திற்கு இசையமைக்க சம்மதித்ததும் ஆச்சரியம் தான். இக்குறும்பட வீடியோவை ஷேர் செய்துள்ள ரஹ்மான் ‘விடிவி 2 உண்மைதானா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

x

Check Also

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உருவாகியிருந்தாலும் என்றும் நிரப்பப்படாத கதிரை ஒன்று உண்டு என்றால் அது ...