சற்று முன்
Home / சினிக்குரல் / என் கணவர் அழகானவர்: சமந்தா

என் கணவர் அழகானவர்: சமந்தா

தெலுங்குத் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடி நாக சைதன்யா, சமந்தா. திருமணத்திற்குப் பின்னும் சமந்தா முன்னணி நாயகிகளில் ஒருவராகவே இருக்கிறார். கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சில பல வாரங்களாகவே சமூக வலைத்தளம் பக்கம் வராமலிருந்தார்.

இப்போது மீண்டும் பிஸியாக அடிக்கடி பதிவுகளை இட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ராணா டகுபட்டியின் ரோகோ நிகழ்ச்சியில் நாகசைதன்யாவும், சமந்தாவும் கலந்து கொண்டுள்ளனர். ராணாவின் அத்தை மகன் தான் நாகசைதன்யா.

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தை நேற்று சமந்தா பதிவிட்டிருந்தார். இன்று அப்போது எடுக்கப்பட்ட நாகசைதன்யாவின் தனி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து ‘எனது கணவர் எவ்வளவு ஹேண்ட்சம் ஆக இருக்கிறார் பார்த்தீர்களா’ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு நாகசைதன்யா, “இது பணம் கொடுத்து பதிவிட்ட ஒன்று போல் இருக்கிறது,” என மனைவி சமந்தாவைக் கிண்டலடித்துள்ளார்.

x

Check Also

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் ...