சற்று முன்
Home / சினிக்குரல் / காதலில் விழுந்தது எப்படி – ராணா

காதலில் விழுந்தது எப்படி – ராணா

‘பாகுபலி’ நடிகர் ராணா டகுபட்டி, சில நாட்களுக்கு முன்பு அவருடைய காதலி மிஹீகா பஜாஜ் என்பவரை சமூக வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ‘ரோகோ’ வைபவம் நடைபெற்றது. ‘ரோகோ’ என்றால் நிச்சயதார்த்தம், திருமணம் பற்றி இருவீட்டாரும் சந்தித்து கலந்து பேசிக் கொள்வதாம்.

நேற்று ராணா, நடிகை லட்சுமி மஞ்சுவுடன் இன்ஸ்டாகிராம் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மிஹீகாவுடன் காதலில் விழுந்தது எப்படி என்று தெரிவித்துள்ளார்.

“மிஹீகாவை ரொம்ப காலமாகவே தெரியும். சித்தப்பா நடிகர் வெங்கடேஷின் மகளான அஷ்ரிதாவுடன் படித்தவர். இருந்தாலும் அவர் மீது காதல் இருந்ததில்லை. நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் இருவருக்குள்ளும் காதல் இருந்தது தெரிய வந்தது. அந்த சமயம் அவர்தான் எனக்கு சரியான வாழ்க்கைத் துணை என உணர்ந்தேன்,” என்று காதலில் விழுந்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

x

Check Also

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் ...