சற்று முன்
Home / சினிக்குரல் / பொன்மகள் வந்தாள் – ஓடிடி வெளியீட்டிற்கான சோதனை

பொன்மகள் வந்தாள் – ஓடிடி வெளியீட்டிற்கான சோதனை

பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் இருக்கின்றன. இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் இதற்கு முன் தாங்கள் பார்த்து ரசித்த பல படங்களையே பலரும் மீண்டும பார்த்து ரசிக்க ஓடிடி தளங்களைப் பயன்படுத்தினர். இந்த ரசனை வேறு, புதிய படங்களை ரசிக்கும் ரசனை வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிரைலர் வெளிவந்த பிறகு அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இல்லை. ஓடிடி தளத்தில் வெளியாகும் தினத்தன்றே இப்படத்தை பலரையும் பார்க்க வைக்க அமேசான் நிறுவனம் பெருமளவில் விளம்பரம் செய்து வருகிறது.

எதிர்காலங்களில் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா வேண்டமா என்பதைத் தீர்மானிக்கும் முதல் சோதனைப் படமாக ‘பொன்மகள் வந்தாள்’ படம் அமையும்.

டிரைலரை 2 கோடி பேர் பார்த்தார்கள் என்று சொன்னதைப் போல முதல் நாளிலேயே படத்தை 20 கோடி பேர் பார்த்தார்கள் என்று மே 29ம் தேதி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போதுதான் அடுத்தடுத்து நேரடியாக ஓடிடி தளத்திற்கு படங்களை எந்தத் தயக்கமும இல்லாமல் தயாரிப்பாளர்கள் தருவார்கள்.

x

Check Also

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் ...