சற்று முன்
Home / சினிக்குரல் / மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்!

மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் அஜித் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்குள் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் அஜித்தும், ஷாலினியும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்.

அவர்களை போலவே வீடியோவில் இருக்கும் மற்றவர்களும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் காணப்படுகின்றனர்.

எனவே இந்த வீடியோ சமீபத்தில் தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதற்காக அஜித் மருத்துவமனை சென்றார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

இது வழக்கமான பரிசோதனை தான் என அஜித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x

Check Also

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் ...