அரோகாரா படத்திற்கு ; தயாரிப்பாளர்கள் ஒரு லட்சம் பக்தர்கள் !

i3 17
i3 17

தமிழில் தொட்ரா என்ற படத்தை இயக்கியவர் டி.மதுராஜ். இவர் அடுத்து இயக்கும் படம் அரோகாரா. இது கடவுள் முருகனை பற்றிய பக்தி படம்.

தமிழில் பக்தி படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது பக்தி படம் எடுத்தால் யாரும் தயாரிக்கவும் முன்வருவதில்லை. அதனால் முருகன் பக்தர்களையே தயாரிப்பாளராக்கி முருகன் பக்தி படம் எடுக்க முடிவு செய்தேன். இதில் ஒரு லட்சம் முருக பக்தர்கள் தங்களால் முடிந்த பணத்தை போட்டு தயாரிப்பாளர் ஆகிறார்கள்.

1980, 2000, 2020 ஆகிய காலகட்டங்களில் நடக்கும், பக்தி படம் என்றாலும் அதிலும் கொஞ்சம் திகில் இருக்கும். முருக பெருமானின் 6 படைவீடுகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது. பழனி முருகனின் நவபாசான சிலை பற்றிய ரகசியமும் படத்தில் இருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.