விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம்

i3 1 9
i3 1 9

நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகர் சார்லி. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் திரைப்படங்களில் உள்ள காமெடி காட்சிகள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

சார்லி தற்போது சண்முகம் சலூன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சலூன் கடைக்காரராக நடித்திருக்கிறார். அவருடன் கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் நடித்துள்ளார். அவர் சலூனுக்கு வரும் வாடிக்கையாளராக நடித்திருக்கிறார். இருவரும் நாட்டு நடப்புகளை பேசிக் கொண்டிருப்பதுதான் கதை களம்.

இதனை கருப்பையா சி.ராம் இயக்கி உள்ளார், கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமு தங்கராஜ் சலூன் கடை ஷெட் போட்டுள்ளார், இந்தப் படம் பல விருதுகளை வென்று வருகிறது. தற்போது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.