சற்று முன்
Home / சினிக்குரல் / ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்
i3 6
i3 6

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார்.

தனது சகோதரர் சஜித்- உடன் இணைந்து சல்மான் கானின் “பியார் கியா தோ தர்ணா க்யா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சல்மானின் “வாண்டட், தபாங், ஏக் தா டைகர்” ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். பிற நடிகர்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார் வாஜித் கான். சில நாட்களுக்கு முன் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் இன்று(ஜுன் 1) காலை காலமானார். வாஜித்தின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...