சற்று முன்
Home / சினிக்குரல் / ஓடிடி தளம் ஒன்றை தொடங்கவுள்ள இளையராஜா
i3 16
i3 16

ஓடிடி தளம் ஒன்றை தொடங்கவுள்ள இளையராஜா

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உள்ளார்கள். ஆனால் எல்லாரிடமும் இருந்து தனித்து தன் இசையால் ராஜா என நிரூபித்தவர் இளையராஜா.

40 ஆண்டுகளுக்கு மேலாக இசையில் ராஜ்ஜியம் படைத்து வரும் இவருக்கு இன்று பிறந்தநாள். உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.

ஏற்கனவே தன் பெயரில் தனியாக யு-டியூப் சனல் நடத்தி வரும் இளையராஜா, அடுத்ததாக ஓடிடி தளம் ஒன்றை துவங்க உள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதில் தன் இசை தொடர்பான பல்வேறு பயணங்களை பதிவிட உள்ளார். ஒரு பாடல் என்றால் அந்த பாடல் உருவான விதம் போன்றவற்றை வீடியோ உடன் பகிர உள்ளார். இளையராஜா பிறந்தநாளில் இன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் இதற்கான அறிவிப்பை இளையராஜாவே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...