சற்று முன்
Home / சினிக்குரல் / எளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்
i3 18
i3 18

எளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்

மலையாளத்தில் சின்னத்திரை நடிகையாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து கதாநாயகியாக இடம் பிடித்தவர் மியா ஜார்ஜ்.. மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமான இவர், ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது மிக எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் மியா ஜார்ஜ். நீண்ட நாட்களுக்கு முன்பே இவர்கள் திருமணம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதால், ஊரடங்கு காரணமாக நாட்களை தள்ளிப்போட வேண்டாமே என நிச்சயதார்த்தத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடத்தியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். அப்போது சூழல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டால் திரையுலகினர் முன்னிலையில் திருமணத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...