காதல் தோல்வியால் கன்னட டி.வி நடிகை தற்கொலை

i3 26
i3 26

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சந்தனா. சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 29 வயதான சந்தனா கர்நாடக மாநிலம் ஹாஸன் மாவட்டத்தை சேர்ந்தவர் பெங்களூரில் தங்கி இருந்து நடித்து வந்தார். இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளாக காதல் இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தினேஷை வற்புறுத்தி உள்ளார். இதற்கு தினேஷ் மறுத்ததோடு அவரது நடிப்பு தொழில் பற்றியும் கேரக்டர் பற்றியும் தவறாக பேசி உள்ளார். இது தொடர்பாக தினேஷ் குடும்பத்திற்கும், சந்தனா குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் மனம் உடைந்த சந்தனா கூல்டிரிங்ஸ்சில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்த கொள்வதை வீடியோ எடுத்திருக்கும் சந்தனா அதற்கான காரணத்தையும் பேசி இருக்கிறார். கடிதமும் எழுதி வைத்திருக்கிறார். இந்த வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சந்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தனாவின் வீடியோவையும், கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தினேசும், அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.