பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள மிளிர் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா சூர்யதேவ் தயாரிப்பில் நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா உடன் நடிகர் சரண் விசாகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.