செலவை குறைக்க மலையாள தயாரிப்பாளர்கள் முடிவு

i3 20
i3 20

உலகையே அச்சுறுத்தும் கொரோன வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக சினிமா உலகமே ஆட்டம் கண்டுள்ளது.

சினிமா மீண்டும் எழுவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மலையாள தயாரிப்பாளர்கள், தயாரிப்பு செலவை 50 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கேரள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சங்கத் தலைவர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது நாங்கள் கூடி பேசி உள்ளோம். விரைவில் அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் பேச இருக்கிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் முன்னோக்கி செல்ல சில கடுமையான வழிமுறைகளை பின்னபற்ற வேண்டும்.

முன்னணி நடிகர்கள் முதல் லைட்மேன் வரை அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டில், தியேட்டர் வெளியீடுகளிலிருந்து வெறும் 6 படங்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடிந்தது. உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். 50 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். திரைப்படத் துறையுடன் தொடர்புடைய மற்றவர்களைச் சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவோம். என்றார்.