விரைவில், ‘கொரோனா குமார்’

i3 25 1
i3 25 1


இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், கொரோனா குமார் என்ற புதிய படத்தை இயக்குகிறார். மலையாளத்தில் வரவேற்பை பெற்ற, ஹெலன் படத்தை, தமிழில், ‘ரீமேக்’ செய்து வரும் கோகுல், கொரோனா குமார் படத்தை, அடுத்ததாக கையில் எடுக்கிறார்.

இது குறித்து, அவர் கூறுகையில், ”ஒரு விஷயத்தை செய்ய முடிவு எடுக்கும் போது, ‘லாக் டவுன்’ அறிவிக்கின்றனர். அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை, காமெடியாக சொல்ல உள்ளோம். இப்படம், நல்லதொரு சமூக கருத்தாகவும் அமையும்,” என்றார்.