எந்திரன் பட ரகசியத்தை 12 வருடத்திற்கு பிறகு கூறிய ஒளிப்பதிவாளர்

cinematographer told secret of eanthiran
cinematographer told secret of eanthiran

12 வருடத்திற்கு பிறகு எந்திரன் படப்பிடிப்பின்போது நடந்த ரகசியத்தை ஒளிப்பதிவாளர் தற்போது கூறியுள்ளார்.

எந்திரன் படத்தில் ரஜினிரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’எந்திரன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கும் நாளன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிகாந்த் ஸ்டில் ஒன்று வெளியானது. கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் அந்த ஸ்டில் இணையதளங்களில் அப்போது வைரலானது.

எந்திரன்

 இந்த நிலையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக ரஜினியை வைத்து எடுத்த இதே புகைப்படம் ஒன்றை தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ’எந்திரன்’ படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த புகைப்படத்தை தான் எடுத்ததாகவும், இந்த புகைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படம் இல்லை என்றும் உண்மையாகவே ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சில்வர் கலர் தொப்பி மற்றும் சில்வர் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு கையில் ரோஜாவுடன் இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தற்போது தான் வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி இந்த புகைப்படத்தின் போட்டோஷூட்டின்போது இதற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ளார் என்பது யூனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ‘எந்திரன்’ புகைப்படமும், அதன் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.