சற்று முன்
Home / சினிக்குரல் / இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை
ajith
ajith

இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஆசை, பிரபல இயக்குனரின் மரணத்தால் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். 

இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள்  நடக்கிறது.

சாஷி

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குனர் சாஷியை போனில் பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது. 

x

Check Also

actor Akshay Kumars

ஊரடங்கில் ஹெலிகாப்டரில் பயணித்த அக்‌ஷய் குமார்மீது விசாரணை!

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதி அளித்தது யார் என்பது குறித்து போலீசார் ...