சற்று முன்
Home / சினிக்குரல் / கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யுங்கள் – விஜய்சேதுபதி வேண்டுகோள்
Vijay sethupathi
Vijay sethupathi

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யுங்கள் – விஜய்சேதுபதி வேண்டுகோள்

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யுமாறு நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய்சேதுபதிகொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருப்பது நிம்மதி அளிக்கிறது.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோருக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி

இதற்காக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு பணியில் நடிகர் விஜய் சேதுபதியும் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: “கருணையும் பச்சாதாபமும் இந்த நேரத்தில் அவசியமாக உள்ளது.

எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவராக இருந்தால் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் ஒரு குடும்பத்தின் உயிரை உங்களால் காப்பாற்றலாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

x

Check Also

8a9a98c8f3ef7772d92d4d9f8a9e72ca

அருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக இவரா!

ஹரியின் இயக்கத்தில் ஆறாவது முறையாக சூர்யா நடிக்கவிருந்த படம் தான் அருவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ...