சற்று முன்
Home / சினிக்குரல் / பார்ட்டிக்கு சென்று வந்த போது மரத்தில் மோதிய கார் –நடிகைக்கு படுகாயம்!
1596260076 5108

பார்ட்டிக்கு சென்று வந்த போது மரத்தில் மோதிய கார் –நடிகைக்கு படுகாயம்!

கன்னட நடிகையாக ரிஷிகா சிங் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரிஷிகா சிங். இவரது சகோதரர் ஆதித்யா நடிகராகவும், தந்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குனராகவும் கன்னட சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று வந்த ரிஷிகா சிங்கின் கார் கட்டுப்பாட்டை மீறி பெங்களூர் அருகே மவல்லிபுரா எனும் பகுதியில் மரம் ஒன்றின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமானது.

காரில் இருந்த ரிஷிகாவுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவர் முழுவதும் குணமாகி வீடு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தியானது கன்னட சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x

Check Also

4b84lpg3ku631

இலங்கைப் பெண் லாஸ்லியாவின் கலக்கல் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. ...