நடிகர் விஜய் சேதுபதி செய்யவுள்ள புதியவிடயம்!

525346
525346

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண ஆவளோடு உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அந்த கதாபத்திரத்தின் சிறு வயது கதாபத்திரத்தில் நடிகர் மகேந்திரன் நடித்துள்ளார்.

அதில் நடிகர் விஜய் சேதுபதி அவருக்கும் நடிகர் மகேந்திரன் அவர்களுக்கும் அவரே டப்பிங் செய்துள்ளாராம்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.