சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்!

lokesh kanagaraj 1584166679
lokesh kanagaraj 1584166679

லோகேஷ் கனகராஜ், தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இளம் வெற்றி இயக்குநர்.

இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதலில் வெளிவந்து மக்கள் நல்ல படம் என்று பேர் எடுத்தது மாநகரம்.

அதன்பின் முன்னணி நடிகரான கார்த்தியை வைத்து கைதி எனும் படத்தை இயக்கினார்.

கைதி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தளபதி விஜய்யை வைத்து தற்போது மாஸ்டர் எனும் படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் மீது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கவனத்தை செலுத்த துவங்கிவிட்டார்.

தனது அடுத்த படத்திற்காக அட்வான்ஸ் கூட வாங்கிவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். அதுவும் மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் வாங்கிய சம்பளத்தை இப்படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கிறாராம்.

மேலும் மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கி சம்பளம் ரு. 1.5 கோடி. இதனை தற்போது நான்கு மாடங்கு உயர்த்தி இருக்கிறார் லோகேஷ்.