சற்று முன்
Home / இலக்கியக்குரல் / மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்
nava
nava

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்

 மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் இன்று தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

வீரகேசரி பத்திரிகையின் கொழும்பு நீதிமன்றச் செய்தியாளராக 1965 இல் ஊடகத்துறையில் பிரவேசித்த இவர் சுமார் 55 வருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். அத்துடன் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பின்னர் 1980 களில் வீரகேசரியின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளராகவும் பத்திரிகைத்துறையில் தனது பணியைத் தொடர்ந்த காசி நவரட்ணம், பின்னர் கொழும்பில் வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

சூரியன் எவ்.எம். ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது செய்தி ஆசிரியராகவும் காசி நவரட்ணம் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், ஆவரங்காலை பிறப்பிடமாகக்கொண்ட இவர், தீவிரமான போர் இடம்பெற்ற காலகட்டங்களில் செய்தி சேகரிப்பில் வீரகேசரியின் யாழ். அலுவலக செய்தியாளராக செய்த பத்திரிகைப்பணி குறிப்பிடத்தக்கது.

x

Check Also

Jayabalan

கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்

மலர்கிறது முல்லைகமகமவெனசுவர்க்கமாய்உயர்கிறதேஎன் மாடித்தோட்டம்.கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்மரண அமைதி அதிரகருவண்டுகள் இசைக்கிறது”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.*அமேசன்காட்டுத்தீயையும் ...