சற்று முன்
Home / தமிழகம் / குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோம் – ஜாமியா மிலியா மாணவிகள்
68
68

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோம் – ஜாமியா மிலியா மாணவிகள்

எங்களுக்கு இந்த அரசு மீது பயம் கிடையாது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை மாணவிகள் இருவர் துணிந்து எதிர்க்கும் வீடியோ  வைரலாகி உள்ளது.

இந்த மாணவிகள் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உள்ளது.

இதற்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் நேற்று 100க்கும் அதிகமான ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று போலீசார் மாணவர்களை இப்படி அத்துமீறி தாக்கிய போது, அங்கு சில மாணவிகள் போலீசாரை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.

மாணவிகள் சிலர் தங்களுடைய நண்பனை காப்பதற்காக போலீசிடம் சண்டை போட்டு அவர்களிடம் அடி வாங்கினார்கள்.

அதில் ஒரு மாணவி கொஞ்சம் கூட கலங்காமல் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தினார். இதனால் போலீசார் அந்த பெண்ணில் காலில் தாக்கினார்கள்.

அதோடு இப்படி எல்லாம் அடிக்க கூடாது.. அவ்வளவுதான், என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த பெண் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தும் வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

cv

இந்த தேர்தலில் நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தரும்!- சி.வி!

தேர்தலின்போது மக்களாகிய நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக அமையட்டும் என வடக்கு மாகாண ...