சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / கனகபுரம் துயிலுமில்லத்தை அபகரிக்க முயற்சி!

கனகபுரம் துயிலுமில்லத்தை அபகரிக்க முயற்சி!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒரு பகுதியை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

கனகபுரம் துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் வேலி ஒன்றை அமைத்து காணியின் அப் பகுதியை அபகரிக்கும் முயற்சியில் தனியார் ஒருவரே சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனகபுரம் ஐந்தாம் பண்ணையைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர், ஏற்கனவே போராளி ஒருவருக்கு காணியை விற்றுவிட்டு யுத்தத்தின் பின்னர் அந்தப் போராளி அக்காணியில் வீட்டைக் கட்டிய பின்பு அக் காணியை அடாவடியாக அபகரித்திருந்தார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

2009க்குப் முன்னர் போராளி குடும்பத்தினருக்கு காணிகளை விற்றுவிட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் போராளிகள் மிரட்டிக் காணியைப் பெற்றார்கள் என முறைப்பாடு செய்து காணிகளை அபகரிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட்ட நபர்களில் இவரும் ஒருவராக உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது துயிலுமில்லக் காணியை அபகரிக்கும் முயற்சியில் குறிப்பிட்ட நபர் ஈடுபட்டுள்ளார்.

x

Check Also

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது ...