சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / சிறீதரன் உள்ளே ஆர்னோல்ட் வெளியே – வித்தி சொல்லும் இரகசியம்

சிறீதரன் உள்ளே ஆர்னோல்ட் வெளியே – வித்தி சொல்லும் இரகசியம்

சுமந்திரனின் சர்ச்சை நேர்காணலுக்குப் பின்பு சுமந்திரன் முகாமில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக சுமந்திரனின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

காலைக்கதிரின் இனி இது இரகசியமில்லை என்ற பகுதியிலேயே சுமந்திரன் அணியில் நடைபெற்ற அதிரடி மாற்றம் தொடர்பான தகவல்களை வித்தியாதரன் வெளியிட்டுள்ளார்.


சுமந்திரனுக்கு ஆதரவாக இருந்தற்காக சுமந்திரனின் மனதில் சம்பந்தனிற்கு அடுத்த இடத்தை சிறீதரன் பெற்றிருப்பதாகவும், சுமந்திரனுக்கு கண்டனம் தெரிவித்த காரணத்தால் இதுவரை அந்த இடத்தில் இருந்த யாழ் மாநகர சபை மேயர் ஆனோல்ட் தூக்கி வீசப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதே வேளை இரண்டு நாட்களுக்கு முன்பு சுமந்திரனுக்கு ஆதரவாக இருந்தமைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சுமந்திரனின் ஆதரவாளர்கள் கிளிநொச்சி சென்று சிறீதரனுக்கு நன்றி தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவானால் நடாத்தப்படும் சுடர் ஒளி செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

x

Check Also

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது ...