சைக்கிள் கட்சிக்கு வாழ்வு கொடுத்த கொரோனா! 50 மில்லியனில் என்ன நடந்தது?

TNPF
TNPF

ஐம்பது மில்லியன் ரூபாவை கொரோனா நிவாரணமாக வழங்கியுள்ளதால் இம்முறை தமது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் ந. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

தம் வசம், 16 பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை உறுப்பினர்களோ இல்லை என்றும் இரண்டு உள்ளுராட்சி சபைகள் மாத்திரமே இருப்பதாக கூறிய அவர், எனினும் தமது கட்சி மக்களிடமிருந்து இந்த நிதியைப் பெற்று நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் தமது கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளது என்றும் எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, இந்த நிதியானது, புலம்பெயர் தேசங்களில் இருந்து மிக அதிகளவில் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த விவாதக் காணொளி குறித்து சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

50 மில்லியன் ரூபா என்பது பெரும் நிவாரணப் பணியினை முன்னெடுக்கும் தொகை என்றும் தமிழ் தேசிய முன்னணியினர் உண்மையிலேயே அந்த நிதியை நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளனரா அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னணியில் போட்டியிட்டால் வெல்ல முடியாது விட்டாலும் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெறலாம் என்றும் முன்னணியின் சார்பில் போட்டியிடும் சில பாராளுமன்ற வேட்பாளர்கள் தமது நண்பர்களுக்கு கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, குறித்த தொலைக்காட்சி விவாத்தில் ந. காண்டீபனுடன் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் கு. சுரேந்திரன், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கொரோனா காலத்தில் தாம் மேற்கொண்ட நிவாரணப்பணிகளில் அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லை என்றும் இது மக்களின் துயரம் துடைக்கும் பணி என்றும் கூறியிருந்தார்.