தனிநபருக்கும் அவர் அரசியலுக்கும் துதிபாடுவதல்ல தமிழ்க்குரலின் நோக்கம்! விடைபெறும் குமாரசிங்கம் !!

20200527 130012 2 scaled
20200527 130012 2 scaled

தனி நபருக்கும் அவர் அரசியலுக்கும் துதி பாடுவதல்ல தமிழ்க்குரலின் நோக்கம் என்றும் தமிழர்களின் இலட்சியமே, தமிழ்க்குரல் ஊடகத்தின் இலக்கு என்று தமிழ்க்குரலின் முன்னாள் பணிப்பாளர் பரமநாதன் குமாரசிங்கம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழ்க்குரல் ஊடகத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பணிநலன் பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்க்குரல் ஊடகத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய பரமநாதன் குமாரசிங்கம், நேற்றுடன் தமிழ்க்குரல் ஊடகத்தில் இருந்து விடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பணிநலன் பாராட்டு நிகழ்வில் கவிஞர் தீபச்செல்வன் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த குமாரசிங்கம்,

தனது அரச பணி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பணிகளை முன்னெடுக்கும் விதமாக தனது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக தமிழ்க் குரல் ஊடகத்தில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

சிலரால் புறக்கணிக்கப்பட்ட சமயத்தில், தெருவில் நிற்கின்ற நிலைக்கு தள்ளப்பட்ட காலத்தில், தமிழ்க்குரல் களமளித்திருந்ததை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் பல்வேறு இடர்பாடுகள் நெருக்கடிகளின் மத்தியிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறினார்.

தமிழ்க்குரல் ஊடகமானது, ஊடக அறத்தின் வழியிலேயே தொடர்ந்து பயணிப்பதாகவும், தனி நபர்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் துதிபாடாமல், தமிழர்களின் இலட்சியமே தமிழக்குரலின் இலக்கு என்றும் இதன் போது தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்க்குரல் ஊடகத்தின் பணியாளர்கள், மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடக கலைஞர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த காலத்தில் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய குமாரங்சிங்கத்தின் நினைவுகள் மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.