சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / முகநூலில் அவதூறாம் -காவல்துறையில் முறைப்பாடு செய்த சுகாஸ்
sugash
sugash

முகநூலில் அவதூறாம் -காவல்துறையில் முறைப்பாடு செய்த சுகாஸ்

தன்மீது அவதூறு பரப்பும் விதமாக முகநூலில் எழுதுவதாகக் கூறி காவல் துறையில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள்.

யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில், வியாபாரி ஒருவரிடம் சரீரப் பிணைக்கு 50,000 கட்டவேண்டும் என்று சொல்லி ஏமாற்றி சட்டத்தரணி ஒருவர் பணம்பெற்றமை தொடர்பான செய்திகள் வெளிவந்திருந்தன. இந்தச் சம்பவத்துடன் சுகாஸ்தான் தொடர்புபட்டுள்ளார் என முகநூலில் பலர் பதிவிட்டிருந்தனர். இச்செயலால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாகக் கூறியே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்

தமிழ் அரசியல் பரப்பில் பலர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த அரசியல்வாதியும் இதுவரை காவல்துறையில் முறைப்பாடு செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x

Check Also

sri

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு! 12 மாதம் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு?

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் ...