பொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தக் கட்டுரைப் போட்டி முடிவு!

pon sivakumaran1
pon sivakumaran1

விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாகத் தியாகம் செய்த மாவீரன் பொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தக் கட்டுரைப்போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழ்த் தேசிய வானொலியினரால், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை எட்டுதல் என்ற கருப்பொருளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கு மொத்தமாக ஏழு கட்டுரைகள் கிடைக்கப்பெற்றதாக அறிவித்துள்ளனர் வானொலிக் குழுமத்தினர்.

கிடைக்கப்பெற்ற ஏழு கட்டுரைகளும் தாயகத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான யதீந்திரா அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அவரின் மதிப்பீட்டின் அடிப்படையில் தமிழரசன் அவர்கள் எழுதிய “புரிந்துணர்வுடனான தீர்வு” என்ற கட்டுரை முதலாவது இடத்தையும், சி.றுக்ஸிகா எழுதிய ‘தனித் தேசமே தமிழர்களுக்கு ஒரே வழி’ என்ற கட்டுரை இரண்டாவது இடத்தையும், பிரதீபன் எழுதிய ‘புலிகளற்ற சூழலில் தமிழரிடம் இன்றுள்ள ஆயுதம் என்ன?’ என்ற கட்டுரை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன எனவும் வானொலிக் குழுமத்தினர் அறிவித்துள்ளனர்.

முதலாமிடத்தைப் பெற்ற கட்டுரையாளர் தமிழரசனுக்கு 30,000 இலங்கை ரூபாவும் இரண்டாமிடத்தைப்பெற்ற கட்டுரையாளர் சி.றுக்ஸிகாவுக்கு 20,000 இலங்கை ரூபாவும் மூன்றாவது இடத்தைப்பெற்ற பிரதீபனுக்கு 10,000 இலங்கை ரூபாவும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நான்கு கட்டுரைகளும் பிரசுரத்திற்கு தகுதியானவை என நடுவரால் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அனுகரன் , சர்மிலா வினோதினி, சுதர்சினி, ஏ.ஜெ.ஞானேந்திரன் ஆகியோரால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு தலா 2,500ரூபாக்கள் வழங்கப்படுவதாகவும் வானொலிக் குழுமத்தினர் அறிவித்துள்னர்.