கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி! -இந்திய வங்கி ஆளுநர்

COVID19
COVID19

நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

7வது எஸ்பிஐ மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 2019 முதல், ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.