கிழக்கில் யார் யார் வெல்ல வேண்டும்! தமிழக்குரலின் தெரிவு

TK EDR
TK EDR

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற எதிர்ப்புணர்வு எமது மக்களிடம் நிலையாகவே இருந்து வருகின்றது. இம்முறை தேர்தலில் இனப்படுகொலையை ஆதரிக்கும் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்பதை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரசை பாதுகாக்கின்ற தரப்புக்களுக்கும் இம்முறை ஆட்டம் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்க்குரல் வடக்கு மாகாணத்தில் யார் யார் வெல்ல வேண்டும் என்ற தெரிவை வழங்கியது. கட்சி கடந்து, தமிழர் அரசியல் ஆரோக்கத்திற்கான  தெரிவை பலரும் பாராட்டி வருகின்ற நிலையில் எமது அவதானத்தை கிழக்கு மண்ணை நோக்கி செலுத்துவோம். உண்மையில் கிழக்கு மாகாணத்தை பேரினவாத சக்திகள் துண்டு துண்டாக பிளவு செய்து ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், அங்கு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலையை கொண்டிருக்கும் கிழக்கு மண் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலும் ஈழ தொல்லியல் வரலாற்றிலும் முக்கியமான நிலப்பகுதி. கிழக்கில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் பொறுப்பெடுக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த நிலையில் கிழக்கில் கீழ் வரும் உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் அந்த மண்ணின் பாதுகாப்பும் அரசியலும் சிறந்து விளங்கும்.

rooban
rooban

01. ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) திருகோணமலை மாவட்டம்தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் தமிழீழத்தின் பொருண்மிய மேம்பாட்டுத்துறை பொறுப்பாளருமான ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்லிங்கம் ரவீந்திரா, திருகோணமலை மண்ணை பாதுகாக்கும் வல்லமை கொண்ட முன்னாள் போராளியாவார். சிங்களத்தால் திட்டமிட்டு திருகோணமலை அபகரிக்கப்படுகின்ற நிலையில், அம் மாவட்டத்தை சேர்ந்த ரூபன், புலிகள் இயக்க காலத்திலேயே அம்மாவட்ட வளர்ச்சிக்காக அரசியல்துறை பொறுப்பாளராக மக்கள் பணி செய்துள்ளார். ஓய்வு பெற வேண்டியவர்கள், அவருக்கு வழிவிடுவது அந்த மண்ணை பாதுகாக்க உதவும். இந்த விடயத்தில் கட்சி கடந்து அனைவரும் ரூபன் அவர்களை ஆதரிக்க வேண்டியது அவசியமானது.

இலங்கை புதிய அரசின் செயல்பாடுகள் ...

02. சீனித்தம்பி யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்டம் – இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களில் ஒழுக்கமும் இனப்பற்றும் நிலப் பற்றுக் கொண்ட வெகுசிலரின் சீனித்தம்பி யோகேஸ்வரனும் ஒருவர். தன்னலமற்ற அரசியல் பண்பும், விடுதலை இயக்கம் மீதான பற்றும் கொண்ட இவர், கடந்த காலத்தில் கிழக்கில் நடந்த அபகரிப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களுக்கு அஞ்சாது குரல் கொடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்புக்காகவும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை வலுவாக எடுத்துரைக்கவும் சீனித்தம்பி யோகேஸ்வரனின் குரல் அவசியமான ஒன்றாகும். இவரை தோற்கடிக்கும் தமிழரசுக் கட்சியின் சதியை முறியடித்து இவரை வெற்றி பெறச் செய்வது அவசியமானது.

மாணிக்கம் உதயகுமார், Batticaloa (2020)

03. மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மாவட்டம் – இலங்கை தமிழரசுக் கட்சி

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றிய மாணிக்கம் உதயகுமார், மக்கள் நலனில் சிறந்த அக்கறை கொண்ட அரச சேவையாளராக கருதப்படுகின்றார். ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள், அரசுக்கும் அரசுடன் அடிவருடிகளாக செயற்படுவோருக்கும் ஆதரவளித்துள்ள நிலையில், திரு மாணிக்கம் உதயகுமார் தமிழ் தேசியப் பாதையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். மாவட்ட அரச அதிபராக திறந்த தலைமைத்துவத்துடன் செயற்பட்ட உதயகுமாரின் பங்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று அவசியமானது.

தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் ...

04. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மட்டக்களப்பு மாவட்டம் – இலங்கை தமிழரசுக் கட்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து தொடர்ச்சியாக இயங்கக்கூடிய ஒருவராகவும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் நலன்கள் பற்றி சிந்திகக்கூடியவராகவும் ஜனா என்று அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் காணப்படுகின்றார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்ந்த தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் இவர், கிழக்கு மாகாண மக்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றவர். கடந்த காலத்தில் மாகாண சபையில் உறுப்பினராக இருந்த ஜனா, தமிழ் தேசியம் மீது உறுதியான பற்றை கொண்டிருப்பதுடன் இன அழிப்புக்கான நீதியை பெறுவதற்கான பயணத்திலும் உளச் சுத்தியுடன் பங்களித்து வருகின்றார்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஆணை ...

05.அரசரத்தினம் தமிழ்நேசன், அம்பாறை மாவட்டம், இலங்கை தமிழரசுக் கட்சி

அம்பாறை மண்ணின் தமிழர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த திரு அரசரத்தினம் தமிழ்நேசன் மிகச் சரியான தேர்வாகும். ஆக்கிரமிப்புக்களாலும் ஒடுக்குமுறைகளாலும் கடுமையாக பாதிக்கப்படும் அம்பாறை மாவட்டத்திற்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் அவசியமாக தேவைப்படுகின்றார். அந்த இடத்தை நிரப்பும் தகைமையும் பண்பும் பொறுப்புணர்வும் கொண்டவர் தமிழ்நேசன். பெயரில் மாத்திரமின்றி தமிழ் மண்ணையும் மக்களையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கக்கூடிய தமிழ்நேசனை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்வது கால அவசியமானது. ஆயுள்வேத அரச வைத்தியராக பணியாற்றி இவர், அம்பாறை மக்களின் அபிமானத்தை பெற்ற ஒருவர். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், அம்பாறையின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பணியில் அனைவரும் விழிப்புடன் இருப்போம்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்