முன்னணியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

manivannan 1
manivannan 1

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் நீக்கப்பட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை அமைப்பின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் சிலர் கேட்க முயன்றபோது கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்று பதிலளித்தார்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியினரால் மணிவண்ணனுக்கு எதிரான அவதூறுப்பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மணிவண்ணன் அவர்கள் யாழ் . மாநகரசபை மேயர் தேர்வில் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் என்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கோரினாராம் என்றும் சமூக வலைத்தளங்களில் மணிவண்ணன்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.