சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / 5 கட்சிகளும் தவறிழைத்துவிட்டது- விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!!

5 கட்சிகளும் தவறிழைத்துவிட்டது- விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!!

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அனுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என முயற்சி செய்தோம். அதன் அடிப்படையில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்தோம். அதன்படி 13 பிரதான கோரிக்கைகள் அறிக்கையிடப்பட்டது.

அதில் மேலதிகமாக இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியது. அதை ஏற்றுக்கொள்ளப்படாததால் பேச்சுவர்த்தையில் இருந்து அவர்கள் வெ ளியேறினார்கள். பின்னர் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைகளில் கையொப்பமிட்டு தென்னிலங்கயைிலுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நேரடியாக பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நேரடியாகப் பேசுவதற்காக சரியான அனுகுமுறைகளை கையாளவில்லை தென்னிலங்கைத் தரப்புடன் பேசும் விடையத்தில் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் தவறிழைத்துள்ளது.

மேலும் 13 அம்சக் கோரிக்கைகளையும் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரித்தால் ஜனாதிபத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என மீண்டும் கூடிப்பேசுவதாக இணக்கம் காணப்பட்டது.

எனினும் எமது தமிழ்த் தலைமைகள் மாணவர்களாகிய எங்களையும் தமிழ் மக்களையும் முட்டாளாக்கி விட்டனர். குறிப்பாக ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப்பேசிக்கொண்டிருந்த போது முதலாவதாக முந்திக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்கினேஸ்வரன் ஒற்றுமையை சிதறடித்தார்.

பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வாழங்குவதாக அறிவித்தனர். இந்த விடயம் தவறான அனுகுமுறையாகும். கட்சிகள் ஒன்றுகூடிக் கதைக்கும்போது தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருவது என நாம் ஆராய்ந்தபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என கோருவோம் என்றார், அதை எழுதியும் தந்தார் அதையே நாம் அன்று ஊடகங்கள் முன்னிலையில் வாசித்தோம்.

அன்று நடந்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வரவில்லை அது வந்தவுடன் நாம் முடிவு எடுப்போம். ஏனெனில் நாம் முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளில் பல உள்ளடக்கப்படும் என நம்புவதாக கூறினார். அதற்கு எமக்கு கடிதமும் தந்தார். ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் வந்தபின்னர் யாருடனும் கலந்தாலோசிக்காது
தமிழ்த் தலைமைகள் தாமாகவே முடிவு எடுத்து விட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் 13 அம்சக் கோரிக்கைகளை விட சஜித் பிரேதமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வலுவற்றதாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேதமதாஸவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப்பேசிய போது மூன்று மாததத்தில் தீர்க்கக்கூடிய விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் இல்லையெனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 ...