சற்று முன்
Home / செய்திக்குரல் / ஆரம்பமானது யாழ் -சென்னை விமான போக்குவரத்து

ஆரம்பமானது யாழ் -சென்னை விமான போக்குவரத்து

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று   உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.

இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை Fits Air விமானம் ஆரம்பித்தது .

இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் சென்றடையும்.

இதேவேளை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் (Alliance Air) விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

அதன்பின்னர் கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் – தேர்தலுக்கு தயார் – சம்பந்தன்

“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” ...