தமிழ் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும்- ரணில் வலியுறுத்து

RANIL
RANIL

ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ச அரசு தமிழ் மக்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தேசிய கீதம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

ஐக்கிய தேசியக் கட்சியினரைப் பழிவாங்குவதைப் போல் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காகத் தமிழ் மக்களை இனவாத, மொழிவாத, மதவாத ரீதியில் பழிவாங்குவதாகவும் தெரிவித்தார்.

தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ராஜபக்ச அரசு இனவாத அரசியலை மேற்கொள்வதாகவும் அதில் ஒன்றுதான் ‘தேசிய கீதம்’ இரு மொழிகளிலும் இசைப்பது தொடர்பான விவகாரம்.

இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகும். 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழ்மொழியிலும் பாடப்பட்டு வந்தது.

எனவே 2020ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்விலும் தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் இசைக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.