சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / குறைந்த விலையில் டொலர் விற்பனை மோசடி கும்பல் கைது!
1 qw
1 qw

குறைந்த விலையில் டொலர் விற்பனை மோசடி கும்பல் கைது!

திருகோணமலை – உவர்மலை பிரதேசத்தில் சந்தை பெறுமதியை விட குறைந்த விலைக்கு டொலர் மாற்றித் தருவதாககூறி மோசடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பத்து இலட்சம் ரூபா பணமும் ஒரு லட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான ஆயிரம் அமெரிக்க டொலரும் மீட்கப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும், பொலநறுவை மாவட்டம் மெதலகிரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் மற்றும் வான் அலை பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

IMG 2927

“சுமந்திரனை தோற்கடிப்போம்” செய்தி வெளியிட்ட உதயன் நாளிதழை விநியோகம் செய்த சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை ...