சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தனது தரப்பினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

தனது தரப்பினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

எனது வெற்றிக்காக யார் பங்கெடுத்திருப்பினும் அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் ஒரு போதும் அரசியல் பழிவாங்களை மேற்கொள்ள மாட்டேன். அப்பாவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன். அவ்வாறானவற்றை செய்ய இடமளிக்க முடியாது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

எனக்கு உதவினார்கள் என்பதற்காக பாரபட்சம் பார்க்க முடியாது. எனது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட படித்தவர்களை பதவியில் நியமிப்பேன்.

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படுவதும் இல்லை” ஏன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சமூக இடைவெளியை பேணும் நவீன தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் ...