சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அதிகரிக்கப்போகும் முக்கிய இரண்டு தேவைகளின் விலைகள்!
1 es
1 es

அதிகரிக்கப்போகும் முக்கிய இரண்டு தேவைகளின் விலைகள்!

எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை துரிதமாக குறைவடைந்துள்ளது.

விலைச்சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால், 11 ரூபாயால் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை குறைத்திருக்க முடியும். ஒரு லிட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலுக்கு அரசாங்கம் தற்போது 55 ரூபாயை வரியாக அறவிடுகின்றது.

ஒரு லிட்டர் 95 ரக சுப்பர் டீசலுக்கு 68 ரூபாயினை வரியாக அறவிடுகின்றது. சாதாரண டீசலுக்காக 15 ரூபாய் வரியை அறவிடுகின்றது. ஒரு லிட்டர் சுப்பர் டீசலுக்கு 35 ரூபாயை பெறுகின்றது. விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மஹிந்த ராஜபக்ஸ விலைச்சூத்திரத்தை இரத்து செய்தார். அதனை இரத்து செய்து விட்டு இந்தியன் லங்கா ஒயில் நிறுவனத்திற்கு 8 வீத வங்கி முறிகள் விநியோகத்தின் ஊடாக 11,000 மில்லியனை செலுத்தினார்கள்.

அதற்கு பதிலாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் செலுத்த வேண்டிய 34,000 மில்லியனில் ஒரு சதத்தையேனும் வழங்கவில்லை. தேர்தல் நிறைவு பெறும் வரையிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

unnamed 21

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 15 உத்தியோகத்தர்கள்!

கடந்த ஜீலை மாதம் 10ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 உத்தியோகத்தர்கள் பணி ...