சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சஜித்தின் காதல் சின்னத்துக்கு அனுமதி கிடைத்தது !
2 rrr
2 rrr

சஜித்தின் காதல் சின்னத்துக்கு அனுமதி கிடைத்தது !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எந்தச் சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்கடி நிலையே நீடித்து வருகிறது.

புதிய அரசியல் கூட்டணியானது யானை சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் சஜித் தரப்பினர் இதயம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னம் தொடர்பில் தொடர்ந்தும் இரண்டு தரப்பினருக்குமிடையில் பாரிய இழுபறி நிலை நீடித்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் பெயர் சமகி ஜன பலவேகய( ஐக்கிய மக்கள் சக்தி) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய பெயரையும் அதற்கான சின்னமான இதயம் சின்னத்தையும் தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

6ce8174e82984e94a7a98889b7c17e32 XL 620x330 1

கருணாவை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்- ரஞ்சித் மத்தும பண்டார

நாங்கள்தான் கருணாவை தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ...