சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / காவலர்கள் இல்லை – கொழும்பு சிறைக்குள் அடிதடி
1 f 1
1 f 1

காவலர்கள் இல்லை – கொழும்பு சிறைக்குள் அடிதடி

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரக, அங்குள்ள கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் “ஐ” பிரிவில் கடும் பாதுகாப்புடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக, அங்கிருந்து சென்று “சீ” பிரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹர்ஷ என்ற நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு இடையில் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் இருந்தார்களா என்பதும் சர்ச்சையாகியுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் நபர் ஒருவருக்கு விஷம் அடங்கிய ஊசியொன்றை ஏற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

unnamed 21

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 15 உத்தியோகத்தர்கள்!

கடந்த ஜீலை மாதம் 10ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 உத்தியோகத்தர்கள் பணி ...