சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே நோக்கம்!
1 wes
1 wes

நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே நோக்கம்!

நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே எமது நோக்கம். அதற்காக மொட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதிலும் எமக்கு பிரச்சினை இல்லை.

அத்துன் வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம் என இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியில் போட்டியிடுவதென்பதே எமது தீர்மானம்.

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச்செய்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னுக்கு கொண்டுசெல்லலாம்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்றாலும் தற்போதுள்ள நிலையில் மக்கள் மத்தியில் மொட்டுச்சின்னமே பிரபலமடைந்திருக்கின்றது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பொறுத்தவரை 22 மாவட்டங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடாமல், 15மாவட்டங்களில் ஒரு சின்னத்திலும் ஏனைய மாவட்டங்களில் வெற்றிலை அல்லது கை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றோம்.

ஏனெனில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அந்த வாக்குகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

unnamed 21

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 15 உத்தியோகத்தர்கள்!

கடந்த ஜீலை மாதம் 10ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 உத்தியோகத்தர்கள் பணி ...