சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மேலும் 208 பேர் வீடு திரும்பினார்கள்!
1 ature
1 ature

தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மேலும் 208 பேர் வீடு திரும்பினார்கள்!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி பொலனறுவை -கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்தியஸ்தானங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 208 பேர் இன்று புதன்கிழமை காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே நேற்று செவ்வாய்க்கிழமை பொலனறுவை – கந்தகாடு மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 311 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றனர்.

குறித்த அனைவரும் இராணுவ பஸ்களில் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

625.500.560.350.160.300.053.800.900.160.90 18

சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய சட்டமா அதிபர்!

எமது மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பான சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா ...