சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கடற்படை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினார் சிப்பாய்

கடற்படை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினார் சிப்பாய்

புத்தளம், முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி கடற்படைத் தளத்தில் கடற்படை சிப்பாய் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் இரு அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விஜேவீர என்ற கடற்படை அதிகாரியே உயிரிழந்துள்ளார். பாலா நவி குமாரசிங்க என்ற கடற்படை அதிகாரியும், அதுக்கொரல என்ற கடற்படை பொறியியலாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது எனக் கடற்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய கடற்படைச் சிப்பாய்  தப்பிச் சென்றுள்ளார் எனவும் கடற்படைத் தரப்பு மேலும் கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...