வைரஸ் தொற்று: இலங்கையில் 143 பேர் இலக்கு

1 d
1 d

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 10 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 6 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 3 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 2 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 நோயாளர்கள் முழுமையாகாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை 143 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், 124 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், இலங்கையின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவக்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.