சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அன்றாடத் தொழிலாளர்கள் நிர்க்கதி!

அன்றாடத் தொழிலாளர்கள் நிர்க்கதி!

ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அன்றாடத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், நடைமுறையில் எந்தவொரு நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு இந்த விடயத்தில் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அன்றாட உழைப்பாளிகளில் அதிகம் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அனுப்புமாறு ஜனாதிபதி செயலகத்ததால் மாவட்ட செயலங்களுக்கு புதன்கிழமை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உதவி பெறுவோர், முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவு பெறுவோர் தவிர்ந்து, அன்றாட உழைப்பாழிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்டோர் விவரங்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் மாவட்டச் செயலகங்களுக்கு இன்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கினால் தொழில் இழந்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு அரசால் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரச உயர்மட்டம் அதிக சிரத்தை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

சமுர்த்தி நிவாரணம், முதியோர் மற்றும் அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு என்பன அரசால் வழமையாக வழங்கப்பட்டு வரும் செயற்பாடே . அவர்களுக்கும் இந்த இடருக்கான மேலதிக நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...