சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்ளம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

“ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, ஓய்வூதிய சம்பளத்துக்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி தபால் அலுவலகங்களுக்குவர வேண்டிய அவசியம் இல்லை.

அத்தோடு ஏப்ரல் மாதம் 04 திகதியளவில் தமது ஓய்வூதிய சம்பளம் தமது வீட்டை வந்தடையாதோர் மாத்திரம் அது தொடர்பில் தமது ஓய்வூதிய சம்பளத்தை வழமையாக பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்தின் தபால் அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுத்தருமாறு கோருமாறு தபால் மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்” என, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட ...