சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வடக்கே பொருள்கள் விலை இனி இறங்கும்

வடக்கே பொருள்கள் விலை இனி இறங்கும்

கொரோனாத் தொற்று நோய் காரணமாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதிகூடிய விலையேற்றத்தைத் தடுக்க  வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுரப்படவுள்ளன. இது தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரு கிலோ சீனி 117 ரூபா வீதம் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் கிலோ சீனியும், ஒரு கிலோ வெங்காயம் 160 ரூபா வீதம் ஒரு இலட்சம் கிலோ வெங்காயமும் , ஒரு ரின் மீன் 100 ரூபா வீதம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரின் மீனும், ஒரு கிலோ அரிசி 98 ரூபா விலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசியும்  ஐந்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் உடனடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு  அரிசி 20 ஆயிரம் கிலோ, சீனி 50 ஆயிரம் கிலோ, பருப்பு 20 ஆயிரம் கிலோ என்பன எடுத்துவரப்படவுள்ளன.  

அதேநேரம் உள்ளூர் மீனவர்களின் நன்மை கருதி ரின் மீன் எடுத்து வரப்படவில்லை என்று யாழ்ப்பாணம்  மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு  50 ஆயிரம் ரின் மீன், 50 ஆயிரம் கிலோ அரிசி, 25 ஆயிரம் கிலோ சீனி, 15 ஆயிரம் கிலோ பருப்பு , பெரிய வெங்காயம் 15 ஆயிரம் கிலோ  அனுமதிக்கப்பட்ட நிலையில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருள்கள் ஏற்றப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்துக்கு  25 ஆயிரம் கிலோ பருப்பு , 25 ஆயிரம் ரின் மீன், 30 ஆயிரம் சீனி,  10 ஆயிரம் கிலோ வெங்காயம்  அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவை கருதி அரிசி, ரின் மீன்  தவிர்த்து சீனி, பருப்பு, வெங்காயம் ஏற்றப்படுகின்றது என்றும்,  இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கும்  அனுமதிக்கப்பட்ட பொருள்களில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருள்கள் எடுத்து வரப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...